Monday 18 April 2011

செவ்வாய் ( மோகனச்செவ்வாய். )

பற்களை ஒளித்து உதடுகளிலேயே சிரிக்கும்.

வரத்தாமதமாகும், ஆட்டோ பிடிக்கவும்
என்ற குறுந்தகவல் படித்ததும், அழைத்து
"நைட் வந்துருவீங்கள்ல" என்று பரிவாய் கேட்கும்.

தாமதமாய் வீடு திரும்பும் நாட்களில்
கார் நிறுத்தும் சத்தம் கேட்டு, 2 கதவு திறந்து
எதிர்பட்டதும், என்னப்பா? ரொம்ப டென்சனா என்று வினவும்.

குழந்தைத்தனமாய் நான் செய்யும் சேட்டைகளை
ரசித்து, பூரித்து, கள்ளமின்றிச் சிரிக்கும்.

பேஷன் சாணல் பார்த்து மாட்டி அசடு வழிய
பல் இளித்தால் "ஏன் இந்த வேல" எனக் கேட்கும்

காரோட்டும் போது, பெடஸ்ட்ரியனில் சாலை கடக்கும்
பெண்களின்பக்கம் எதேச்சயாய் கண்கள் திரும்பினால்
மௌனமாய்ப் புன்னகைத்து தடுக்கும்.

ரம்யமான எகாந்தச் சூழ்நிலைகளில் காதல் பொங்க
என்னை ஒருமையில் அழைத்துவிட்டு, குறும்பாய்ச் சிரிக்கும்.

என்மனமறிந்து, பேசும். பாடும்.

தகப்பனின், சொட்டைத் தெலையைப் பகடி செய்தால்
மட்டும் எமைப் "பொறுக்கி" என்று சாடும்

என் தேவதையின் மோகனச் செவ்வாய்.

எம் எழுத்தை என்றேனும் ஒரு நாள் வாசிக்கும்.








என்றென்றும் அன்புடன்
மதுரை இராஜா

2 comments:

  1. இந்தக் கவிதையை வாசித்ததா அந்த மோகனச் செவ்வாய்? காதலியை வர்ணிப்பதில் இது ஒரு வழியா? ரொம்ப நல்லா இருக்கு.

    அடிக்கடி பதிவு இடுங்கள். கைவசம் நிறைய இருக்குமே... :)

    ReplyDelete